Vanur: காரில் கடத்திய ரூ. 70 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

38

Vanur: கோட்டக்குப்பம் மதுவிலக்க அமலாக்க பிரிவு போலீசார் செல்வம், நீலமேகம், வெங்கடேசன் ஆகியோர் நேற்று காலை புதுச்சேரி – திண்டிவனம் சாலையில், மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற இனோவா காரை நிறுத்தி சோதனை செய்ததில், 30 அட்டை பெட்டிகளில் 720 டின் பீர் கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதன் மதிப்பு ரூ.70 ஆயிரமாகும். அதனைத் தொடர்ந்து கார் டிரைவரை பிடித்து விசாரித்ததில், அவர் செங்கல்பட்டு மாவட்டம், துரைப்பாக்கம் கண்ணகி நகர் திருமுருகன் மகன் சந்தானராஜ், 41; என்பதும், புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

You might also like