S.R.M வேளாண்மைஅறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற தேசிய உழவர் தினவிழா.
கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் (VSP)
S.R.M வேளாண்மைஅறிவியல் கல்லூரிமாணவர்கள் பங்கு பெற்ற தேசிய உழவர் தினவிழா.
தேசிய உழவர் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற உழவர் தின விழாவில் SRM கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில் அமைந்துள்ள SRM வேளாண் மற்றும் அறிவியல் கல்லூரியில் தோட்டகலை பயிலும் 4-ம் ஆண்டு மாணவர்கள், (சந்தோஷ், சுதன், கார்த்திகேயன், ராமசாமி, துரைமுருகன், பாரிமோகன், இராமகோபலன், இந்திராஆதித்தின் தினகர்சிங்) ஆகியோர் திண்டிவனதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புசங்கம் நடத்திய உழவர் தினத்தில் கலந்துகொண்டு உழவர்களுடன் ஆலோசனை மேற்க்கொண்டனர்.
இவர்கள் டாக்டர் இராவணச்சந்தர், டாக்டர் நவீன்குமார் மற்றும் டாக்டர் ராஜிவ் தலைமையில் வெள்ளிமேடுபேட்டையில் தங்கி அப்பகுதியில் உள்ள தாதபுரம், ஊரள், நெய்குப்பி, பாஞ்சாலம் பகுதியில் உள்ள உழவர்களுடன் பயிற்சி மற்றும் ஆலோசனை பெற்று வருகின்றனர்.