uniform : பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா

127

uniform : வானுார் ஒன்றியம் பெரிய முதலியார்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எல். கே. ஜி. , யு. கே. ஜி. , மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கணக்கு ஆசிரியர் கோதண்டம் வரவேற்றார். விழாவில் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜெயவேல் பங்கேற்று, மாணவர்களுக்கு சீருடை அணிவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆசிரியர்கள் வளர்மதி, ராஜேஸ்வரி, கிளாரன்ஸ், தமயந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

எல். கே. ஜி. , மாணவர்களின் பெற்றோர்களின் வேண்டுகோளின்படி, ஆசிரியர் இருதயராஜ் முயற்சியில், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர் அருள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பள்ளியின் கம்யூட்டர் ஆசிரியர் சுப்ரிஜா நன்றி கூறினார்.

You might also like