Biryani Recipe | சீரக சம்பா பிரியாணி

Biryani Recipe | சீரக சம்பா பிரியாணி
Biryani : முதலில் 2 கப் சீராக சம்பா அரிசியை நன்றாக கழுவி பின் தண்ணீரை ஊற்றி 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
பின்னர் அரிசி ஊறும் 20 நிமிடத்திற்குள் பச்சை மிளகாய் – 6, 1/2 கைப்பிடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, 1/2 கைப்பிடி புதினா போட்டு விழுதாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அவர்றை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், மேலும் பட்டை – 2, அன்னாசி பூ – 3, பிரியாணி இலை – 2, மிளகு – 1/2 ஸ்பூன், ஏலக்காய் – 2, கல்பாசி – சிறிதளவு, லவங்கம் – 2,
இவற்றை போட்டு எண்ணெயில் இந்த மசாலா பொருட்களை நன்றாக பொரிய விடவும்.
பின் மிகவும் பொடியாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் இரண்டை போட்டு பொன்னிறம் வரும் வரை நன்றாக வதக்கவும்.
சீரக சம்பா பிரியாணி :
பிறகு இஞ்சி மற்றும் பூண்டு விழுது – 2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்காள், ஒரு நிமிடம் வரை நன்றாக வதக்கி பின் அவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதனோடு சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.
மஞ்சள் தூள் – 1/2 டேபில் ஸ்பூன், மல்லித்தூள் – 2 டேபில் ஸ்பூன், கரம் மசாலா – 2 டேபில் ஸ்பூன், சேர்த்து இந்த வதக்கி விட்டவும்.
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி ஆகியவைகலை ஒவ்வொரு கைப்பிடி எடுத்து இதில் போட்டுக் கொள்ளவும்.
எல்லா பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். குக்கரில் செய்தால் 2 கப் அளவு அரிசிக்கு, 3 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.
தேவையான அளவு உப்பு போடவும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி நன்றாக கலந்து இந்த தண்ணீரை கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதி வந்ததும் ஊறிக் கொண்டிருக்கும் சீராக சம்பா அரிசியை தண்ணீரை வடித்து இதில் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்..
கொதி வந்தத பின் இதன் மேலே இரண்டு வாழை இலைகளை போட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
குக்கரை மூடி ஒரு விசில் விட்டு பின்னர் அடுப்பை அணைத்து விடவும். சூப்பரான சீராக சம்பா பிரியாணி தயார்.
Egg Paniyaram Recipe | பத்து நிமிடத்தில் ஈஸியான முட்டை பணியாரம்
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.