Gingee : அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு திறப்பு

Gingee : ஒன்றியம், பாடிப்பள்ளம் ஊராட்சி, அரசு துவக்கப் பள்ளியில் கணினி ஸ்மார்ட் வகுப்பறை துவக்க விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் பவானி வரவேற்றார்.
ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன், கணினி வழிக் கல்வி தொடு திரையை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கணினி பயிற்சி புத்தகத்தை வழங்கி பேசினார்.
விழாவில், உதவி தலைமை ஆசிரியர் சிறுமலர், தி.மு.க., செஞ்சி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கவுதமன், கல்வி வேளாண்மைக் குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.