Villupuram District : பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

797

Villupuram District : பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

Villupuram District : விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பாகமாக விழுப்புரம் மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியானது விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகின்ற 19ஆம் தேதியன்று நடைபெற இருக்கின்றது. காலை 10:00 மணிக்கு இந்த பேச்சு போட்டியானது நடைபெற உள்ளது.

வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளன. இந்த பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக 5000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும் இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் வழங்கப்படும்.  வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசு தொகையாக தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேச்சு போட்டியில் மொத்த பரிசுத் தொகையாக ரூபாய் 24 ஆயிரம் வழங்கப்பட இருக்கின்றது.

எனவே இந்த பேச்சு போட்டியில் விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

இந்த பேச்சு போட்டி தொடர்பான மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசையும் வையுங்கள்.

வெற்றி பெற இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நம் திண்டிவனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Villupuram District  : படிகட்டில் பயனம் செய்த மாணவர் படுகாயாம்

Villupuram District  : திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்த போது தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்த மாணவர் பேருந்தில் நெருக்கடியாக இருந்ததால் படிக்கட்டில் பயணம் செய்தார்.

படிக்கட்டில் பயணம் செய்த இந்த மாணவர் சாரம் கிராம மின்வாரிய அலுவலகம் எதிரே பேருந்து சென்று கொண்டிருந்தது பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

பலத்த காயமடைந்த மாணவரை பேருந்தில் பயணம் செய்த மற்ர பயணிகள் மீட்டு உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

tindivanam student bus accident

அங்கு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பொதுமக்கள் & சமூக ஆர்வலர்கள் கருத்து

இதுபோன்று படிக்கட்டில் பயணம் செய்வதால் மரணம்கூட நிகழ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுபோன்ற விபத்துக்களை தவிர்க காலை மற்றும் மாலையில் பள்ளி கல்லூரி  நேரத்தில் அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிகப்படியான பேருந்துகள் இயக்கும்போது இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கலாம்.

Loading...
You might also like