Vikravandi: விக்கிரவாண்டியில் சர்வீஸ் சாலை அமைக்க சிலைகள் அகற்றம்

101

Vikravandi: விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் மேம்பாலம் அமைக்க சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுகிறது. வடக்கு பைபாஸ் பகுதியில் சர்வீஸ் சாலையை இணைக்க அங்கிருந்த அண்ணாதுரை, பெரியார் சிலைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் தடையாக உள்ளது.

இதையடுத்து, நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் இணைந்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினர். கட்சியினர் சிலைகளை அகற்ற சம்மதம் தெரிவித்தனர். நேற்று பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நகராட்சி பொறியாளர் செல்வராஜ், ஆலோசகர் பிரபாகரன் மற்றும் கட்சியினர் முன்னிலையில் வடக்கு பைபாஸ் முனையிலிருந்த அண்ணாதுரை, பெரியார் சிலைகளை ஜே.சி.பி., மற்றும் கிரேன் உதவியுடன் அகற்றினர்.

வரும் வாரங்களில் சர்வீஸ் சாலைகள் இணைக்கும் பணி முடிந்து, விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கவுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like