Gingee: செஞ்சியில் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா

117

Gingee: செஞ்சி கூட்ரோட்டில் பா.ஜ., இந்து முன்னணி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்தநாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி முன்னாள் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம், பா.ஜ., வர்த்தகர் பிரிவு மாநில நிர்வாகி கோபிநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்.

இந்து முன்னணி நிர்வாகி விஷ்ணு, பா.ஜ., நிர்வாகிகள் ஏழுமலை, தங்கராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., நாராயணமூர்த்தி, செல்வமூர்த்தி, ராஜா தேசிங்கம், பிரகாஷ், பா.ஜ., நிர்வாகிகள் சரவணன், ஸ்ரீரங்கன், சத்தியசீலன், ராஜேந்திரன், மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

You might also like