Suffering Continues In Lumps And Bumps : குண்டும், குழியுமாக தொடரும் அவலம்

150

Suffering Continues In Lumps And Bumps : குண்டும், குழியுமாக தொடரும் அவலம்.

 

விழுப்புரம் சாலாமேடு என். ஜி. ஜி. ஓ. , காலனி மெயின் ரோடு புதுப்பிக்கப்படாமல் நீண்டகாலமாக குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் ஓரமாக, திருச்சி மெயின் ரோடில் தொடங்கி, சாலாமேடு இ. பி. , காலனி சாலை வரை 3 கி. மீ. , தொலைவில் செல்லும் என். ஜி. ஜி. ஓ. , காலனி மெயின் ரோடு, ஏற்கனவே தார்ச்சாலையாக போடப்பட்டிருந்தது.

நீண்டகால பயன்பாடு மற்றும் அதிகளவு வாகன போக்குவரத்தால், ஜல்லிகள் இருக்கும் இடம் தெரியாமல் பெயர்ந்து சாலை படுமோசமானது.

இதனால் மழைக்காலங்களில், இந்த சாலையில் பல இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கும் அளவில் மிக மோசமான நிலை தொடர்கிறது. அந்த பகுதி குடியிருப்புகளில், பாதாள சாக்கடை திட்டம் முடிந்ததும் சாலை புதுப்பிக்கப்படும் என கூறிய நிலையில், பாதாள சாக்கடை திட்டம் முடிந்து பல மாதங்களாகியும், இந்த மெயின் ரோடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் என பலரும் குண்டும், குழியுமான சாலையில் சிரமத்துடன் செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக சேதமடைந்து கிடக்கும் இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Loading...
You might also like