Tindivanam: திண்டிவணம் அரசு மருத்துவமனைக்கு இன்வெர்ட்டர் வழங்கல்

144

Tindivanam: திண்டிவனம் ஹோஸ்ட் லயன் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டிற்கு இன்வெர்ட்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று(அக்.2) காலை நடந்தது. சங்கத்தின் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமார் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் சந்தானம், சஞ்சீவி பிரபாகரன், டாக்டர் ரவிச்சந்திரன், வெங்கடேசன், சையத் முபாரக், லோக நாதன், ரவிசந்திரன், புஷ்பராஜ், அஜய் குமார், பாலாஜி, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காந்திஜெயந்தியை முன்னிட்டு, நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, திண்டிவனம் ரயில்வே வாக்கர்ஸ் பார்க்கில் தூய்மை படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

Loading...
You might also like