collector inspects gingee: செஞ்சி அருகே வளர்ச்சி திட்ட பணி ஆட்சியர் ஆய்வு

collector inspects gingee: செஞ்சி ஒன்றித்தில் கொணலுார், கோணை, சிட்டாம்பூண்டி ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று (மார்ச்.25) ஆய்வு செய்தார்.
ஊராட்சியில், 19 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க பயனாளிகளை சந்தித்து உண்மைத்தன்மை குறித்து கேட்டறிந்தார்.
நீர்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை ஆய்வு செய்து, குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் நாள், குளோரினேஷன் செய்யும் நாளை பதிவு செய்ய அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டார்.