TVK: செஞ்சி த. வெ. க நிர்வாகிகள் டிரெண்ட்.. மற்றகட்சிகள் மத்தியில் கலக்கம்

53

TVK: செஞ்சியில் த.வெ.க., வினர் தொகுதி பொறுப்பாளர் குணா சரவணன் தலைமையில் ஒன்றிய தலைவர் பாண்டியன், நகர தலைவர் நஸ்ருதீன் மற்றும் நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக மனு கொடுத்துள்ள புதிய வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று புதிய வாக்காளருக்கு மாலை அணிவித்து, பழம், இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய அணுகுமுறை இளைஞர்களை கவரும் வகையில் இருப்பதால் மற்ற கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.