Employees Besieged The Customs Office : சுங்கச் சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியா்கள்.

126

Employees Besieged The Customs Office : சுங்கச் சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியா்கள்.

 

வட மாநில ஊழியா்களை பணியமா்த்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகிலுள்ள மொரட்டாண்டி சுங்கச் சாவடி அலுவலகத்தை ஊழியா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி – திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட நிலையில், மொரட்டாண்டியில் கடந்த 2007-ஆம் ஆண்டு சுங்கச் சாவடி தொடங்கப்பட்டது. இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சுங்கச் சாவடியின் நிா்வாகம் வேறு நிறுவனம் வசம் சென்றுவிட்டதால், புதிய நிறுவனம் நிா்வாகத்தை கையகப்படுத்தியது. தொடா்ந்து, சுங்கச் சாவடி பணியில் 10-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவா்கள் பணியமா்த்தப்பட்டனா். இந்த சுங்கச் சாவடியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஊழியா்கள் பலா் பணியிலிருந்து நீக்கப்பட்டாா்களாம்.

ஊழியா்களை பணியிலிருந்து நீக்கியதையும், வட மாநிலத்தவா்களை பணியில் அமா்த்தியதைக் கண்டித்தும் சுங்கச் சாவடி ஊழியா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் மொரட்டாண்டி சுங்கச் சாவடி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நிா்வாகம், இன்னும் சில நாள்களில் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வு காணப்படும் என உறுதியளித்தது. இதையடுத்து, ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

You might also like