DMK : தி. மு. க. , நிர்வாகிகள் அமைச்சர் பொன்முடிக்கு வாழ்த்து

119

DMK : அமைச்சர் பொன்முடியின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனத்தை சேர்ந்த தி. மு. க. , வினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பிறந்த நாள் விழா நேற்று விழுப்புரத்தில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நேற்று காலை விழுப்புரத்திலுள்ள அவரது இல்லத்தில், அமைச்சர் பொன்முடியை திண்டிவனத்தை சேர்ந்த தி. மு. க. , நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பொக்கே கொடுத்தும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் விழுப்புரம் மாவட்ட தி. மு. க. , இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் ரமேஷ், விஜயகுமார், உதயகுமார், திண்டிவனம் நகராட்சி கவுன்சிலர்கள் ரேகாநந்தகுமார், பரணிதரன், பார்த்தீபன், சுதாகர், இளங்கோ, சத்தீஷ், முன்னாள் கவுன்சிலர் கிடங்கல் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உடன் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

You might also like