Minister : விவசாயிகளுக்கு விதை நெல் அமைச்சர் வழங்கினார்

144

Minister : செஞ்சியில் வேளாண்மைத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு விதை நெல் மூட்டைகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

செஞ்சி வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா சாகுபடிக்கான விதை நெல் வழங்கும் நிகழ்ச்சிசெஞ்சி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வரவேற்றார்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் விவசாயிகளுக்கு சிவன் சம்பா, வெள்ளை பொன்னி, சீரக சம்பா உள்ளிட்ட விதை நெல் மூட்டைகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவி குமார், துணைச் சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, துணை வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர், உதவி விதை அலுவலர் சிவக்குமார், கண்காணிப்பாளர் மஞ்சுளா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் ரவி, ராஜேந்திரன், தி. மு. க. , விவசாய அணி அமைப்பாளர் ராஜேந் திரன், அவைத்தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, தொண்டரணி பாஷா, இளைஞரணி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

You might also like