Vanur : அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது

159

Vanur : வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று இளங்கலை ஆங்கிலம், கம்ப்யூட்டர் அறிவியல், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்தது. தேர்வான மாணவர்களுக்கு, கல்லூரி முதல்வர் வில்லியம் சேர்க்கைக்கான சான்றிதழ்களை வழங்கினார். இன்று (27ம் தேதி)தமிழ் மற்றும் கணக்குப்பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதில் பங்கு கொள்ள வேண்டிய மாணவர்களுக்கு தாங்கள் விண்ணப்பித்த துறைகளின் மூலம் மொபைல் போன் மூலமாகவும், மின்னஞ்சல மூலமாகவும் தகவல்கள் அனுப்பட்டுள்ளது என்றும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுற்ற நிலையில் எஞ்சியுள்ள இடங்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி கலந்தாய்வு நடக்கிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

You might also like