Three Schools Were Selected As The Best Schools In The District : மாவட்டத்தில் மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு

112

Three Schools Were Selected As The Best Schools In The District : மாவட்டத்தில் மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு.

திண்டிவனத்திலுள்ள ரோஷணை நகராட்சி இந்து தொடக்க பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 2022-23ம் கல்வியாண்டினற்கான சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், வானுார், நெசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விக்கிரவாண்டி, சாமியாடி குச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, திண்டிவனம், ரோஷணை நகராட்சி இந்து தொடக்க பள்ளி ஆகியவை, சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வரும் 14ம் தேதி சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடைபெறும் விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறந்த பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க உள்ளார்.

You might also like