திண்டிவனம் ATMல் கிடந்த 71,800 ரூபாய் பணம் | Tindivanam 360

670

ATMல் கடந்த 71,800 ரூபாய் பணம்

Tindivanam 360 : திண்டிவனம் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த சிவராஜ் அருகிலுள்ள ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்றுள்ளார்

வழக்கம்போல் பணம் எடுக்க சென்று சிவராஜ். ஏற்கனவே ஏடிஎம்-ல் பணம் இருப்பதை கண்டுள்ளார். அதனை எடுத்து எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 71,800 ரூபாய் இருந்துள்ளது.

அந்த பணத்தை சிவராஜ் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று ஒப்படைத்தார். மேலும் அந்த பணத்தைஉரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.

பணத்தை நேர்மறையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்ததற்கு சிவராஜுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர் காவல்துறையினர்.

இந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற மனிதர்கள் சிலர் இருப்பதால் தான் மழை பெய்கிறது. மேலும் இதுபோன்று அனைவரும் நேர்மையாகவும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என திண்டிவனம் மக்கள் கூறுகின்றனர்.

திண்டிவனத்தில் RSS சார்பில் யுகாதி விழா | Tindivanam 360

திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை உயர்நிலைப்பள்ளியில் RSS சார்பில் பள்ளி வளாகத்தில் யுகாதி விழாவானது நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சாணக்கியா கல்வி குழும இணை தாளாளர் வேல்முருகன் அவர்கள் தலைமை தாங்கி பேசினார்.

RSS tindivanam news

மேலும் தொழிலதிபர் நவீன் இந்த விழாவிற்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க மாநில பொறுப்பாளர் திரு செந்தில்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்த யுகாதி விழா நிகழ்ச்சியில் பண்பை வளர்க்கும் விளையாட்டுகள் என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தை விழுப்புரம் மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் அவர்கள் வெளியிட்டார்.

அதனை கீழ் மண்ணூர் முன்னாள் தலைவர் தர்ம சிவம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை மாவட்ட மக்கள் தொடர்பு துறை பொறுப்பாளர் பிரபு ஒருங்கிணைத்தார்.

இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

கர்ணாவூர் சுடுகாட்டில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு  | Tindivanam 360

திண்டிவனம் அடுத்த கர்ணாவூர் சுடுகாட்டை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கர்ணாவூர் சுடுகாட்டில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்துள்ளன.

இடபற்றாக்குறையால் இறந்தவர்களின் உடல்கலானது புதைப்பதில் பல ஆண்டுகளாக சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

மேலும் மழைக்காலங்களில் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள ஓடையில் தண்ணீர் ஓடுவதால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாத நிலை ஏற்படும் அவலம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

karnaavur news tindivanam

மேலும் கர்ணாவூர் சுடுகாட்டில் தகனமேடை இல்லாமல் இருப்பதை குறித்தும் அருகில் உள்ள ஓடையில் பாலம் அமைப்பது குறித்தும் அமைச்சர் மஸ்தானிடம் கவுன்சிலர்கள் ரேகா நந்தகுமார்,  சின்னசாமி ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையின் பேரில் அமைச்சரின் நேர்முக உதவியாளர் ரிஸ்வான் அவர்கள், நகராட்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது தகனமேடை அமைப்பது குறித்தும் ஓடையில் பாலம் கட்டி தருவதை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கோரிக்கையானது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Loading...
You might also like