திண்டிவனம் : பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது | Crime News

Tindivanam Crime News :
திண்டிவனம் : பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
திண்டிவனம் அருகே பதினேழு வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வடமணிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் திருமலை. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதான பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி சில மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை தேடி வந்தனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நேற்று மாலை வடமணிப்பாக்கத்தில் திருமலையை கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே பள்ளி சிறுமியிடம் சீண்டல் : வாலிபர் கைது.
திண்டிவனம் அருகே 14 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அடுத்த ஒலக்கூரைச் சேர்ந்தவர் குப்பன் மகன் விக்கி இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 12ஆம் தேதி 14 வயது பள்ளி சிறுமியை கடத்தி விட்டதாக கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு விசாரித்தார்.
விசாரித்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே சிறுமியை விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த விக்கியை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
Tindivanam Crime News : திண்டிவனத்தில் 7.50 லட்சம் ரூபாய் பரிமுதல் :
திண்டிவனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 7.50 லட்சம் ரூபாய் பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயிலானது நேற்று காலை 7 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட போது ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தேசி S2 கோச்சில் பயணம் மேற்கொண்டார். இவர் உடன் பயணித்த இரண்டு நபர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார்.
சோதனையில் ஒரு பையில் நான்கு லட்சம் ரூபாயும் மற்றொரு கையில் 3.50 லட்சம் ரூபாயும் அவர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கனகரா ராம் மற்றும் ஹர்சண்ட் ராம் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஃபேஷன் பொருட்கள் வியாபாரிகள் என்பதும் வியாபாரத்தில் கிடைத்த பணத்தை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த அதிகாரி அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளார். ஆவணங்கள் ஏதும் இல்லை எனக் கூற ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து சென்னை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சென்னையில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதால் 1.50 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்தனர்.