திண்டிவனத்தில் 2 நாட்களில் 8 லட்சம் வரிவசூல் | Tindivanam Seithi

711

திண்டிவனத்தில் 2 நாட்களில் 8 லட்சம் வசூல் – Tindivanam Seithi

Tindivanam Seithi : திண்டிவனம் நகராட்சியில் வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு நகராட்சி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் 8 லட்சம் ரூபாய் வரி பணமாக வசூலானது.

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வ,ரி காலிமனை வரி உள்ளிட்ட பல வரிகளுக்கு நீண்டகாலமாக வரித் தொகை செலுத்தப்படாமல் இருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஒருவாரமாக வரி பாக்கி வைத்துள்ளார்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. சௌந்தர் ராஜன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் வரி வசூல் செய்யும் வகையில் தண்டோரா போட்டு கூறிவருகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திண்டிவனம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வரி பாக்கி செலுத்தாததால் பிஎஸ்என்எல் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.

 நகராட்சி கடைகளில் உள்ளவர்கள் வரி செலுத்தாமல் இருந்து வந்ததால் அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதேபோல் நகராட்சியில் வரி செலுத்தாமல் இருந்த 189 பேருக்கு இரண்டு நாட்களில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு நாட்களில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 574 ரூபாய் வரி பணமாக வசூலானது.

இதனால் திண்டிவனம் நகராட்சி அலுவலகமானது மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

மாணவிக்கு பாராட்டு விழா

மயிலம் அடுத்த கொள்ளியங்குணத்தில் செயல்பட்டு வரும் BWDA கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையே கவிதை போட்டியானது நடத்தப்பட்டது.

bwda college

இந்த கவிதை போட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவி சசிகலா முதல் இடத்தை வென்றார்.

அதனைத் தொடர்ந்து மாணவி சசிகலாவுக்கு கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி செயலாளர் பிரபல ஜெரோஸ் தலைமை தாங்கினார்.

முதல்வர் சுதா கிரிஸ்டி ஜாய், துணை முதல்வர் சேகர் ஆகியோர் மாணவியை பாராட்டி பேசினர். கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

குஷால்சந்த் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Tindivanam Seithi – குஷால்சந்த் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது.

குஷால்சந்த் நடுநிலைப்பள்ளியில் 1970-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் மாணவர்களான முன்னாள் கவுன்சிலர் வடபழனி, சவுக்கத்அலி, ரகு, அசோக்குமார், சங்கரநாராயணன், சுந்தர்ராமன், பாலாஜி முன்னிலை வகித்தனர். 

பள்ளியின் தலைவர் பப்ளாசா, செயலாளர் ஜின்ராஜ், துணைத் தலைவர் நவீன்குமார், ராஜராஜேஸ்வரி சித்தர் பீட் ரகுராம அடிகளார், பள்ளி தலைமையாசிரியர் அப்பாண்டைராஜ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

ஆசிரியர்கள் சந்திரகீர்த்தி, விருஷ்பதாஸ், பிரபாவதி, சூரியநாராயணன், பாலசுந்தரம், செல்வமேரி, செல்வகுமாரி வாழ்த்திப் பேசினர். லட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நீலாதேவி நன்றி கூறினார்.

இதுபோன்ற திண்டிவனம் மற்றும் விழுப்புரம் சார்ந்த அரசியல், க்ரைம் மற்றும் அன்றாட நிகழ்வு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம் திண்டிவனம் இணையத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

You might also like