திண்டிவனம் நகராட்சி தேர்தல் 2022

576

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் நகராட்சியில் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

திண்டிவனம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. அதில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக இருபத்தி ஒன்பது வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.

 திமுகவும் அதிமுகவும் ஏறத்தாழ சம பலமாக உள்ளன.  எந்த கட்சி அதிக வார்டுகளை கைப்பற்றும் என மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

 திமுகவும் அதிமுகவும் தங்களது பலத்தை நிரூபிக்க பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். வாக்காளர்களை கவர பல புதிய திட்டங்களையும் திண்டிவனத்தின் வளர்ச்சிக்கான பல முக்கிய அம்சங்கள் வாய்ந்த திட்டங்களையும் தங்களது பிரச்சாரத்தில் கூறிவருகின்றனர்.

 இந்த தேர்தலானது மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.  திண்டிவனத்தில்  திமுக  அதிமுக தவிர மேலும் சில கட்சிகளும் களமிறங்கியுள்ளன.

 திமுக, அதிமுக விற்கு அடுத்தபடியாக திண்டிவனத்தில் பெரிய கட்சியாக கருதப்படுவது பாமக ஆகும்.  பாமக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் களத்தில் களமிறங்கியுள்ளனர்.

திண்டிவனத்தில் உள்ள 33 வார்டுகளில் மொத்தமாக 160 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிகபட்சமாக அதிமுக முப்பத்தி இரண்டு வார்டுகளில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

29 வார்டுகளில் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தைகள் மூன்று இடத்திலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. மேலும் பாமக 18 வார்டுகளிலும் பாஜக 10 வார்டுகளிலும் ஆமமுக 14 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.

மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் 9 இடங்களில் போட்டியிடுகின்றனர். தேமுதிக 2 எஸ்டிபிஐ மற்றும் விஜய் மக்கள் இயக்கம் தலா ஒவ்வொரு வார்டிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் சுயேட்சைகள் ஆக 43 பேர் திண்டிவனம் நகராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

You might also like