விவசாயி உதட்டை கடித்த வியாபாரி கைது | Tindivanam News

337

Tindivanam அருகே உள்ள கீழ்மாவிலங்கை பகுதியில் ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக ஊர் மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்திக்கும் ஊர் மக்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் இவர் அதே பகுதியை சேர்ந்த வத்தமலை என்ற விவசாயியின் உதட்டை கடித்துள்ளார். இதில் உதடு துண்டிக்கப்பட்ட வத்தமலை அலறி துடித்துள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக Tindivanam அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்..

மேல் சிகிச்சைக்காக வத்தமலை முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசில் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

You might also like