PMK Tindivanam பொதுக்குழுவின் தீர்மானங்கள் :

1,227

திண்டிவனம் நகர பாட்டாளி மக்கள் கட்சி ( PMK Tindivanam ) பொதுக்குழுவின் தீர்மானங்கள் :

 

தீர்மானம் -1

PMK Tindivanam : திண்டிவனம் நகரத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும் பாதுகாப்பான முறையில் பணிகள் நடைபெறும் முறையை திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என இந்நகர பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது

தீர்மானம்-2

திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தின் மறு சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் திண்டிவனம் நகரத்தில் வாழும் பொது மக்களும் பள்ளிக்கு செல்லும்மாணவச் செல்வங்கள் அன்றாடம்பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிதிண்டிவனம் நகர வீதிகளில்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதுஎனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாகதலையிட்டு மேம்பால சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும்இதே நிலை மீண்டும் தொடர்ந்தாள் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்நகர பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

தீர்மானம்-3

திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் நகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைமேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்வரி வசூல் என்ற பெயரில் அடாவடி செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் நகராட்சி நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மீறி இதுபோன்ற செயல்கள் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டால் திண்டிவனம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்நகர பொதுக்குழு தீர்மானிக்கின்றது‌.

தீர்மானம்-4

திண்டிவனம் நகரத்தில் தங்கு தடையின்றி கிடைக்கும்போதைப் பொருட் களை கட்டுபடுத்தபோதைப் பொருட்களை கட்டுப்படுத்த திண்டிவனம் நகர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்என இந்நகர பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது‌.

PMK Tindivanam தீர்மானம்-5

திண்டிவனம் நகரத்தில் அதிகபரப்பளவும்கொள்ளளவும்கொண்டக் இடங்கள் ஏரியைகொண்ட கிடங்கல் ஏரியில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில்பொதுமக்களுக்கு பயன்படும் வகையில்
படகு குழாம் மற்றும் நடைபாதை அமைத்துத் தர பொதுப்பணித் துறையும் நகராட்சி நிர்வாகமும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நகர பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

நம் திண்டிவனம் Facebook & Instagram பக்கங்களை Follow செய்யுங்கள்.

மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like