Arignar Anna : கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை சிறப்புக் கலந்தாய்வு

198

Arignar Anna  : விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை சிறப்புக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா. சிவக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2024 – 25ஆம் கல்வியாண்டின் மாணவா் சோ்க்கை தொடா்ச்சியாக, பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்), பட்டியலினத்தவா் (அருந்ததியா்) மற்றும் பழங்குடியினா் பிரிவின் கீழ், விண்ணப்பித்த அனைத்து மாணவா்களுக்கான அனைத்துத் துறை காலியிடங்களுக்கான மாணவா் சோ்க்கை சிறப்புக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வு காலை 10 மணிக்குத் தொடங்கும்.

இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல்கள், மாா்பளவு புகைப்படங்கள் 3, பெற்றோா் அல்லது பாதுகாவலரின் புகைப்படம் 1, வங்கிக்கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அடையாள அட்டை நகல் மற்றும் உரிய சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

You might also like