Vikravandi டோல் பிளாசாவின் புதிய கட்டண விவரம்.

Vikravandi டோல் பிளாசாவின் புதிய கட்டண விவரம்.
விழுப்புரம் மாவட்டம் Vikravandi டோல் பிளாசாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.
திண்டிவனத்திலிருந்து உளுந்தூர் பேட்டை வரை 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச் சாலைகளை Vikravandi டோல் பிளாசா பராமரித்து வருகிறது.
விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் ஆண்டு தோறும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமுல்செய்யப்பட்டது.
தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் விபரம் பின் வருமாறு:
(அடைப்பு குறிக்குள் தற்போது வசூல் செய்யப்படும் கட்டண விபரம் )
கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றிக்கு ஒரு வழி கட்டணம் ரூபாய் 100 (ரூபாய் 90)பல முறை
பயணிக்க ரூபாய் 150 (ரூபாய் 135) மாதாந்திர கட்டணம் ரூபாய் 3045 (ரூபாய் 2,660)
இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் ரூபாய்180 (ரூபாய் 155) பல முறை பயணிக்க ரூபாய் 265
(ரூபாய் 235 ) மாதாந்திர கட்டணம் ரூபாய் 5,330(ரூபாய் 4,650),
டிரக், பஸ் போன்றவற்றிற்கு ஒரு வழி கட்டணம் ரூபாய் 355(ரூபாய் 310) பல முறை பயணிக்க ரூபாய் 535 (ரூபாய் 465 ) மாதாந்திர கட்டணம் ரூபாய் 10,665 (ரூபாய் 9,305),
பல அச்சு வாகனம் (இரு அச்சுகளுக்குமேல்) ஒரு வழி கட்டணம் ரூபாய் 570 (ரூபாய்500 ) பல முறை பயணிக்க ரூபாய்855 (ரூபாய் 750) மாதாந்திர கட்டணம் ரூபாய் 17,140 (ரூபாய் 14, 950)
பள்ளி பேருந்து மாதாந்திர கட்டணம் ரூபாய் 1000 மட்டும் (ரூபாய் 1000 ) , உள்ளூர் வாகன கட்டணம் வகை 1 மாதாந்திர பாஸ் ரூபாய் 150, வகை 2 மாதாந்திர பாஸ் ரூபாய் 300 என மாற்றமின்றி வசூலிக்கப்படவுள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகளிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் ஆட்சியர், எஸ்.பி திருவெண்ணைநல்லூரில் நேரில் ஆய்வு :
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமை வாய்ந்த எல்லிஸ்சத்திரம் தடுப்பனையில்,
தொடர் கனமழையின் காரணமாக நீர் வெளியேற்றப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் த. மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர் புகழொந்தி.
நம் திண்டிவனம் Facbook & Instagram பக்கங்களை Follow செய்யுங்கள்.
மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.