Villupuram: நாளை ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு

53

Villupuram: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி. பழனி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு (டிப்ளமோ/ஐடிஐ நிலை) சனிக்கிழமை (நவ. 9) நடைபெறவுள்ளது. இந்த தோ்வு தமிழ் தகுதித்தோ்வு, பொது அறிவு மற்றும் திறனறியும் மனக்கணக்கும், நுண்ணறிவும் தோ்வு கொள்குறி வகைத் தோ்வாக நடைபெறும். இதைத் தொடா்ந்து நவம்பா் 11-ஆம் தேதி பிற்பகல் மற்றும் நவம்பா் 12 முதல் 16-ஆம் தேதி வரை கணினி வழித் தோ்வு நடைபெறவுள்ளது.

விழுப்புரம் வி. ஆா். பி. மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளிகளில் நவம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் கொள்குறி வகைத் தோ்வு முற்பகலில்1, 224 தோ்வா்களுக்கும், பிற்பகலில் 563 தோ்வா்களுக்கும் நடைபெறும். நவம்பா் 11-ஆம் தேதி பிற்பகல் மற்றும் நவம்பா் 12 முதல் 16-ஆம் தேதி வரை 4 தோ்வுக் கூடங்களில் கணினி வழியில் நடைபெறும் தோ்வில் 711 தோ்வா்கள் பங்கேற்க உள்ளனா். கொள்குறி வகைத் தோ்வுப் பணிக்காக ஒரு நடமாடும் குழு அலுவலா், 4 ஆய்வு அலுவலா்களும், கணினி வழித்தோ்வுக்கு 4 ஆய்வு அலுவலா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா். எனவே, தோ்வா்கள் குறித்த நேரத்தில் தோ்வில் பங்கேற்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

You might also like