Uttar Pradesh Husband: மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்.. சொன்ன காரணம் தான் ஹைலைட்..!

126

Uttar Pradesh Husband: உத்தரப்பிரதேச மாநிலம் சாந்த்கபூர் பகுதியில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே, திருமணத்திற்கு முன்பே ராதிகா தனது கிராமத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பிறகும் அந்த உறவு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த ராதிகாவின் கணவர் பப்லு, அவரை கண்டித்துள்ளார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, மனைவி ராதிகாவை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்த கணவர் பப்லு, இதுகுறித்து அவரது மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறியுள்ளார்.

இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பின்னர் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும், பப்லு ராதிகாவிடம் 2 குழந்தைகளையும் தானே வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு அவரும் சம்மதிக்கவே, குழந்தைகளை பப்லு அழைத்துச் சென்றுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like