Vanur | சிறுவனை கடத்தி வாலிபர்

Vanur | சிறுவனை கடத்தி வாலிபர் | அதிர்ச்சியில் பொதுமக்கள்
Vanur : கடந்த 15ஆம் தேதி இரவு புதுச்சேரி குயவர்பாளையத்தில் பெட்டிக்கடை ஒன்றில் 20 வயதுமிக்க வாலிபர் 11 வயது சிறுவனை பைக்கில் வைத்திருந்தார்.
அந்த சிறுவன் அழுது கொண்டிருந்த நிலையில் அந்த வாலிபரை பொதுமக்கள் விசாரித்த போது பொது மக்களிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
அந்த வாலிபரை சந்தேகித்த பொதுமக்கள் அவரை பிடித்து உருளையான்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையின் போது அந்த சிறுவன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கோட்டக்குப்பத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்தது.
அந்த வாலிபரிடம் மேலும் விசாரித்தபோது பெற்றோரிடம் பணம் பறிப்பதற்கு வீதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை கடத்தி வந்துள்ளார் என்று தெரிய வந்தது.
மேலும் அந்த போலீசார் வாலிபனை கைது செய்து சிறையில் வைத்து விசாரித்த போது வெளிநாட்டவர்கள் விழுப்புரம் மாவட்டம் கோடக்குப்பம் பகுதியில் அதிக அளவில் வசித்து வருவதாக தெரிய வந்து.
அந்த வாலிபர் திட்டமிட்டிருந்தபடி தனது இரு சக்கர வாகனம் பழுதானது போல் நடித்து அந்த பகுதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை வாகனத்தை தள்ளுமாறு கூறியுள்ளார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது அச்சிறுவனை கடத்தியுள்ளார் என்பதும் வரும் வழியில் பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டார் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.