Vanur News | சாலை மறியலில் ஈடுபட்ட எடச்சேரி கிராம மக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட எடச்சேரி கிராம மக்கள்
Vanur News : விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் புதுகுப்பம் பஞ்சாயத்து மதுரா எடச்சேரி கிராமத்தில் பல ஆண்டுகாலமாக குடிதண்ணீர் சாயல் சிகப்பு நிறாமாக மாறியதால்.
குடிநீருக்காக எடச்சேரி கிராமமக்கள் பக்கத்து கிராமமாகிய உப்புவேலூர் கிராமத்திற்கு சென்று குடிதண்ணீர் கொண்டுவந்து அருந்திவந்தனர்.
நாலொரு மேனியும் பொழுதோர் வண்ணமுமாகி நாட்கள் கடந்துவந்தன.
அக்கிராமத்திற்கு தற்பொழுது கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநி ஊராட்சி மன்ற தலைவர் முயர்ச்சியினால் பலன் கிடைத்தது.
மத்திய அரசு நிதியிலிருந்து புதுகுப்பம் ஊராட்சி மதுரா எடச்சேரி ஊராட்சிக்கு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக 900.000 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆழ்துளை கிணறு மற்றும் பைப் லைன் போடபட்டது.
ஆனால் அமைக்கப்பட்ட பைப் லைன் JCP இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
Vanur News | சாலைமறியலில் ஈடுபட்டனர்
இதனை கண்டித்து எடச்சேரி கிராமமக்கள் இதனை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் பாண்டி To திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நம் திண்டிவனம் Facebook மற்றும் Instagram
பக்கங்களை Follow செய்யுங்கள்.
மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.