TVK : தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் இடம்: டி. எஸ். பி. ஆய்வு

103

TVK : விக்கிரவாண்டி அடுத்த வி. சாலையில் வரும் 23ம் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடத்த 31 நிபந்தனைகளுடன் அனுமதியை காவல் துறை வழங்கியது. விக்கிரவாண்டி டி. எஸ். பி. , நந்தகுமார், நேற்று(செப்.11) மாநாடு நடைபெறவுள்ள 85 ஏக்கர் பரப்பளவு இடத்தையும், வாகனங்கள் நிறுத்தவுள்ள பைபாஸ் சாலையின் கிழக்கு பகுதியிலுள்ள 40 ஏக்கர் மற்றும் மேற்கு பகுதியிலுள்ள 28 ஏக்கர் பரப்பளவு இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, தனிப்பிரிவு ஏட்டு சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

You might also like