Villupuram : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

Villupuram : நகராட்சிக்குட்பட்ட அனிச்சம்பாளையம் பகுதியில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோலியனூரான் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாய்க்காலில் தேங்கியுள்ள வண்டல் மண் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, நீர் வழித்தடத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் சீராக வெளியேறி, அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரத்தை அவர் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் நகராட்சி ஆணையர் திருமதி. வசந்தி மற்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு. அருணகிரி ஆகியோர் மாவட்ட ஆட்சியருடன் உடனிருந்தனர். வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் அவசியத்தை ஆட்சியர் வலியுறுத்தினார்.