Collector Inspects Vikravandi Hospital: விக்கிரவாண்டி மருத்துவமனையில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

60

Collector Inspects Vikravandi Hospital: விக்கிரவாண்டி தாலுகா மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர், சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

விக்கிரவாண்டி கக்கன் நகரில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கியது. கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு செய்தார்.

போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி, கட்டுமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தாலுகா அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

அங்கிருந்து கால்நடை மருத்துவமனை, புதுகுளம் பால் குளிரூட்டும் நிலையம், உழவர் சந்தை கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

 

ஆய்வின்போது, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தமிழரசன், செயல் அலுவலர் ஷேக் லத்தீப், வி.ஏ.ஓ. ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம், டாக்டர்கள் காயத்ரி, சாஜிதா, கண்காணிப்பாளர் கிரி உடனிருந்தனர்.

 

You might also like