வாக்குப்பதிவு இயந்திர அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு – Villupuram News

1,438

 Villupuram Elections Latest News :

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது எவ்வித பெரிய அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் நிறைவடைந்தது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமாக மூன்று நகராட்சிகளும் 7 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் 210 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்று முடிந்தது. இந்த 120 பதிவுகளுக்கு 935 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நேற்று முன்தினம் 346 ஓட்டுப்பதிவு மையங்களில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தலானது நடைபெற்றது. 2 லட்சத்து 15 ஆயிரத்து 553 ஓட்டுக்கள் பதிவாகின. 72.39 சதவீதம் ஓட்டுகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பதிவானது. 

838 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் முடிந்ததும் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. வழுதி ரெட்டி இஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் விழுப்புரம் நகராட்சியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

திண்டிவனம் நகராட்சியில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோட்டகுப்பம் நகராட்சியில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பேரிடர் மேலாண்மை புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அனந்தபுரம் மற்றும் செஞ்சி பேரூராட்சிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் பதிவான ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தேவனூர் ஸ்ரீலட்சுமி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பேரூராட்சியில் பதிவு செய்யப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் என்னபடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் பதிவான இயந்திரங்கள் காந்தி நினைவு பள்ளியிலும் விக்கிரவாண்டி பேரூராட்சியில் பதிவான இயந்திரங்கள் விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மையங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :

விக்கிரவாண்டியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் அதிகாரிகளால் மிகவும் பாதுகாப்பாக வைத்து சீல் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் மொத்தமாக 15 வார்டுகள் உள்ளன. அதில் ஒரு வார்டில் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் 14 வார்டுகளில் நேற்று முன்தினம் தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற்றது.

ஓட்டு பதிவு நடைபெற்ற பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தலைமையில் ஓட்டுச்சாவடியில் இருந்து ஓட்டு பதிவான அனைத்து இயந்திரங்களும் பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையமான விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அனைத்து பாதுகாப்பு வசதியும் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வார்டு வாரியாக ஓட்டு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்டன. மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரது முன்னிலையிலும் அந்த அறையானது பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் அங்கு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாதவண்ணம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

You might also like