NEET : நீட்தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்ற விழுப்புரம் மாணவர்

NEET : 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 13 மொழிகளில் கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. இந்த தேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாணவ-மாணவிகள் உள்பட 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த பிரபா கரன்-விமலாதேவி தம்பதியின் மகனான ரஜநீஷ் என்ற மாணவர், நீட் தேர்வில் 720 மதிப்பெண்க ளுக்கு 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத் ததோடு விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார்.
இவர் நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் இண்டர் நேஷனல் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு படித்தார். அதே பள்ளியில் நீட் தேர்விற்கான சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று வந்த நிலையில் தற் போது நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.