Silambattam : தேசிய போட்டிகளில் சாதித்து வரும் விழுப்புரம் மாணவர்கள்

313

Silambattam : விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் எம். எஸ். சிலம்பாட்ட கழகம் தொடங்கப்பட்டு, கடந்த 2021ம் ஆண்டில் இருந்து, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் பயிற்சியை அளித்து வருகின்றனர். இதில், விழுப்புரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து, இங்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் சிலம்பம் போட்டியில் தேசிய அளவிலான போட்டி, மாநில அளவிலான போட்டி, மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள், கோப்பைகள் வென்று சாதித்து வருவதாக சிலம்பாட்டக் கழக பயிற்சியாளர் சாமிவேல் தெரிவித்தார்.

You might also like