Communist Madurai Conference: திண்டிவனத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு

Communist Madurai Conference: மதுரையில் நடக்கும் மா.கம்யூ., மாநாட்டு ஜோதிக்கு திண்டிவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரையில் இன்று 2ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை மா.கம்யூ., சார்பில் 24வது அகில இந்திய மாநாடு நடக்கிறது. இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு, சிங்காரவேலர் நினைவு ஜோதி கொண்டு செல்லப்படுகிறது.
மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சி திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடந்தது. வட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, ராமமூர்த்தி, மாநிலக்குழு வாலண்டினா, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், தொழிற்சங்கம் ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.