TVK: விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க மாநாட்டில் தொண்டர்கள் அலை

146

TVK: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி. சாலையில் முதல் மாநில மாநாடு நேற்று மாலை 3: 00 மணிக்கு துவங்கியது. மாநாட்டிற்கு கட்சி தலைவர் விஜய் தலைமை தாங்கி, கட்சிக்கொடியை பாடல் இசைக்க மாநாட்டு முகப்பில் உள்ள 100 அடி உயர கொடி கம்பத்தில் ரிமோட் மூலம் ஏற்றி வைத்தார்.

பின், மேடையின் நடுவே அமைக்கப்பட்ட ஆறு அடி உயர ரேம்ப் வே மீது 800 மீட்டர் துாரம் நடந்து சென்றபடி கட்சித் தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்றார். மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார். பொருளாளர் வெங்கட்ராமன், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, தலைவர் குஷி மோகன், துணைத் தலைவர் வடிவேல் உட்பட அனைத்து அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

You might also like