Vikravandi police: விக்கிரவாண்டியில் காவலர்களுக்கு ஓய்வறை கட்டும் பணி தொடக்கம்

149

Vikravandi police: விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், மயிலம் போக்குவரத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசார் பயன்படுத்தும் விதத்தில் 9.40 லட்சம் ரூபாய் செலவில் அறை கட்டப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் ஓய்வெடுக்கும் வகையில் காவல் நிலைய வளாகத்தில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. டி.எஸ்.பி. நந்தகுமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் ராஜாமணி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.

You might also like