Vanur : மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி

Vanur : விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் கன மழை பெய்தது. இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள புறநகர் பகுதிகளான இந்திரா நகர், மஞ்சு நகர், விஜிபி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கன மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் வெளியில் சென்று வர பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.