Villupuram : சட்ட நகல் எரிப்பு போராட்டம்

177

Villupuram : புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய கம்யூ. , சார்பில் விழுப்புரத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

சுதந்திர இந்தியாவில் வாழும் உரிமையைப் பறிக்கும் வகையில், மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளதாகக் கூறி, அந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்க, மாவட்ட செயலர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன் முன்னிலை வகித்தனர்.

மாநில நிர்வாக குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட பொருளாளர் இன்பஒளி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், நாராயணன், ஜெயச்சந்திரன், சகாபுதீன், ஜெயமலர் கண்டன உரையாற்றினர்.

You might also like