விழுப்புரத்தில் தொடர் கொள்ளை, சிறுமி கடத்தல் முயற்சி எதிரொலி: முக்கிய சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் திடீர் சோதனை

46

Villupuram News : விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொடர் கொள்ளை மற்றும் சிறுமிகள் கடத்தல் முயற்சி சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதா இதுவரை மீட்கப்படவில்லை. இதற்கிடையில், ஜெயங்கொண்டான், கண்டமானடி மற்றும் மரக்காணம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து சிறுமிகளைக் கடத்த மர்ம நபர்கள் முயன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

மறுபுறம், விழுப்புரத்தில் வீடு புகுந்து தம்பதியின் கழுத்தில் கத்தி வைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி நடந்ததும் மக்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இத்தகைய குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் விடியற்காலை வரை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் முக்கியச் சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனத் தணிக்கை மற்றும் திடீர் சோதனையில் ஈடுபட்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

You might also like