மயிலம்: தமிழக அரசைக் கவிழ்க்க விடுதலைச் சிறுத்தைகள் சதி – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

47

Mailam News : விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி தீபாவளி குடும்பத் திருவிழாவில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தீபாவளி பண்டிகைக்குள் அறிவிக்கப்படாத மின்தடையைச் சரி செய்ய வேண்டும். உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களை ஆதரிக்கும் வகையில் சீன பட்டாசுகளைப் புறக்கணிக்க வேண்டும். ஹலால் வர்த்தகத்தைக் தடை செய்ய வேண்டும்.

அமைச்சரவையில் இருந்தாலும் வெளியே முதல்வர் விஜய் அரசாங்கத்தைக் கவிழ்க்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சதி செய்கிறது. பா.ம.க. எப்போது வேண்டுமானாலும் அங்குச் செல்லத் தயாராக உள்ளது. சனாதனம் குறித்துப் பேசும் வன்னி அரசுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் கட்சியின் ஆன்மீகப் பேரவை மாநிலத் தலைவர் சக்திவேல் மற்றும் மாவட்டத் தலைவர்கள் உடனிருந்தனர்.

You might also like