Mailam: அருகே காளியம்மன் கோவிலில் திருட்டு

6

Villupuram: மாவட்டம் மயிலம் அருகே கோரைக்கேணி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில், பூசாரி முருகன் வழக்கம்போல் கோவிலைப் பூட்டிவிட்டுச் சென்றார்.

மறுநாள் காலையில் கோவிலின் முன்பக்க இரும்புக்கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ₹20,000 காணிக்கைப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பூசாரி அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

You might also like