தூக்கத்தில் தந்தை விழுந்ததில் ஒரு மாதக் குழந்தை உயிரிழப்பு

120

Villupuram : மயிலம் அருகே பாதிராபுலியூரைச் சேர்ந்த ஸ்ரீதர் – அம்பிகா தம்பதியின் ஒரு மாதக் குழந்தையான தீக்ஷிதன், கடந்த 2-ம் தேதி தூக்கத்திலிருந்த தந்தை ஸ்ரீதர் தற்செயலாகக் குழந்தை மீது விழுந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில், இது குறித்து மயிலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like