Tindivanam : திண்டிவனம் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் சாலை மறியல்

634

Tindivanam : திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,

மின்சாரத் தடையால் விளக்குகள், மின்விசிறிகள் இயங்காதது மற்றும் குடிநீர் உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகள் குறித்து உரிய பதில் அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

பொறுப்பு பொறியாளர் பாதியிலேயே வெளியேறியதால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள், தீர்மான நகல்களைக் கிழித்து எறிந்துவிட்டு உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

திண்டிவனம் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

You might also like