கார்த்திகை தீபத் திருவிழா: விழுப்புரத்தில் களைகட்டும் வண்ண அகல் விளக்குகள் தயாரிப்பு!

87

Villupuram News : வரும் 24-ம் தேதி பௌர்ணமியன்று கொண்டாடப்படவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் அருகேயுள்ள தென்னமாதேவி, மேலமங்கலம், தென்மங்கலம் மற்றும் சாலை அகரம் ஆகிய பகுதிகளில் இப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தென்னமாதேவியில் உள்ள சுடுமண் சிற்பக் குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள், கண்களைக் கவரும் வகையில் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் 50-க்கும் மேற்பட்ட ரகங்களில் விளக்குகளை உருவாக்கி வருகின்றனர்.

இங்கு ஒரு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. சாதாரண ஒரு திரி முதல் 5 திரி விளக்குகள், குபேர விளக்கு, கலச விளக்கு, வேல் அகல் மட்டுமின்றி, நவீன வடிவங்களான மேஜிக் லேம்ப், ரெயின்போ விளக்கு மற்றும் ஹாங்கிங் டூம் லேம்ப் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்தக் கலைநயமிக்க விளக்குகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

You might also like