மரக்காணத்தில் கனமழையால் 2,000 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு

65

Marakkanam News : விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பெய்த கனமழையால், சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேதாரண்யம் மற்றும் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக முக்கிய உப்பு உற்பத்திய மையமாக திகழும் இங்கு, மத்திய-மாநில அரசுகளின் நிலங்கள் மற்றும் தனியார் நிலங்கள் என மொத்தம் 6,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது.

மழைநீர் மற்றும் கடல்நீர் உப்பு பாத்திகளில் கலப்பதால், இங்கு உற்பத்தியாகும் உப்பின் தரம் வேதாரண்யம் மற்றும் தூத்துக்குடியை விடக் குறைவாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த ஆண்டு 300 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை உப்பு, இந்த ஆண்டு விலை வீழ்ச்சியடைந்து 220 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தரக்குறைவு மற்றும் பருவமழை பாதிப்புகளால் இப்பகுதி உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

You might also like