அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: வரும் டிசம்பர் 6-ல் புதிய இயக்கத்தைத் தொடங்கும் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி!

39

Political News : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடந்த ஜூலை 25-ஆம் தேதி தனது 88-வது பிறந்தநாளின் போது தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும், இனி கட்சியை மகன் அன்புமணி மற்றும் மருமகள் சவுமியா கவனிப்பார்கள் என்றும் அறிவித்தார். அன்புமணி குடும்பத்துடன் பங்கேற்ற இவ்விழாவை, ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புறக்கணித்தார்.

அப்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து தமிழக என்.ஆர்.காங்கிரஸில் தனக்கும் மகன் முகுந்தனுக்கும் முக்கியத்துவம் கோரிய ஸ்ரீகாந்தியின் முயற்சி, அன்புமணி தரப்பு நெருக்கடியால் கைகூடவில்லை. மேலும், தந்தையுடன் அன்புமணி இணக்கமானதிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்குச் செல்வதையும் ஸ்ரீகாந்தி தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 6-ஆம் தேதி சென்னையில் ‘சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை’ ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீகாந்தி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ராமதாஸின் ஆதரவாளர்கள் மற்றும் பா.ம.க-விலிருந்து ஒதுங்கியுள்ள முக்கியத் தலைவர்களை அவர் ஒருங்கிணைத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like