Crackers : பட்டாசு குடோன்களில் ஆய்வு

Crackers : விக்கிரவாண்டி தாலுகாவில் பட்டாசு குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விக்கிரவாண்டி தாலுகாவில் அதனுார், சிறுவாலை, பனமலை, அன்னியூர் பகுதிகளில் இடங்களில் பட்டாசு தயாரிக்கும் குடோன்கள் உள்ளன.
பட்டாசு குடோன்கள் விதிமுறைப்படி செயல்படுகிறதா என மாவட்ட தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் பர்வதம் தலைமையில் தாசில்தார் யுவராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், நாகராஜன், மாரியம்மாள், உதவியாளர் அரவிந்தன், மற்றும் அனைத்து கிராம வி. ஏ. ஓ. , க்கள் உடனிருந்தனர்.