திண்டிவனம் நகராட்சி தேர்தல் முடிவுகள் – வார்டு வாரியாக

2,868

நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக அபார இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளதை தமிழகமே கொண்டாடி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பேரூராட்சிகளிலும் நகராட்சிகளிலும் எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது என்ற விபரத்தை இதில் காண்போம்.

Tindivanam urban local body 2022 results :

திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் அதிகப்படியான வார்டுகளை திமுக தனது வசமாக்கியுள்ளது. மொத்தம் உள்ள 33 வார்டுகளில் இருபத்தி மூன்று இடங்களை திமுக பெற்று நகராட்சி சேர்மன் பதவியை தனது வசமாக்கி உள்ளது.

அதிமுக நான்கு இடங்களில் வெற்றி பெற்று சேர்மன் பதவியை அதிமுக இழந்தது.

திண்டிவனம் நகராட்சியில் வார்டு-1ல் திமுகவை சேர்ந்த சதீஷ் வெற்றி பெற்றுள்ளார். இரண்டா வது வார்டில் அதிமுகவை சேர்ந்த திருமகள் செங்கேணி வெற்றி பெற்றுள்ளார்.

வார்டு மூன்றில் திமுக ரேகா வார்டு நான்கில் சுயட்சை லதா சக்கரபாணி வெற்றி பெற்றுள்ளனர்.

வார்டு 5 இல் முத்துலட்சுமி வார்டு 6 இல் சேர்ச் தில்ஷாத் பேகம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வார்டு எழில் திமுகவை சேர்ந்த புனிதா ராஜேந்திரன் 8வது வார்டில் திமுகவை சேர்ந்த ரவிச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளனர்.

வார்டு 9 இல் திமுகவை சேர்ந்த நிர்மலா வார்டு 10-ல் திமுகவை சேர்ந்த பாஸ்கரன் வெற்றி பெற்றுள்ளனர்.

வார்டு 11 இல் பாமக கட்சியை சேர்ந்த ஹேமமாலினி வெற்றி பெற்றுள்ளார். வார்டு பன்னிரண்டில் அதிமுகவை சேர்ந்த சரவணன் செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

வார்டு-13 இல் திமுகவை சேர்ந்த எம்டி பாபு, வார்டு பதினான்கில் திமுகவை சேர்ந்த சுதா செல்வம் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வார்டு 15 இல் திமுகவை சேர்ந்த வளர்மதி வெற்றி பெற்றுள்ளார்.

வார்டு 16 இல் அதிமுகவை சேர்ந்த கார்த்தி வெற்றி பெற்றுள்ளார். வார்டு 17 இல் சுயேட்சையாக நின்று ரேணுகா இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

வார்டு-18ல் திமுகவை சேர்ந்த லட்சுமி பிரபாகரன் வார்டு 19 இல் திமுகவை சேர்ந்த சரவணன் வெற்றி அடைந்துள்ளனர். 

வார்டு20-ல் திமுகவை சேர்ந்த ரம்யா வெற்றி பெற்றுள்ளார். வார்டு இருவத்தி ஒன்றில் சுயேட்சையாக நின்ற தீபா வெற்றி பெற்றுள்ளார்.

வார்டு இருவத்தி இரண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ராஜலட்சுமி வெற்றி பெற்றுள்ளார். வார்டு 23-இல் அதிமுகவை சேர்ந்த ஜனார்த்தனன் வெற்றி அடைந்துள்ளார்.

வார்டு இருவத்தி நாளில் ராம்குமார், வார்டு 25இல் ரேகா நந்தகுமார் வார்டு 26-ல் செந்தில் குமார் வார்டு இருவத்தி ஏழு-ல் ஷபி என்கின்ற சபியுல்லா, 28-ல் சந்திரன்  29-ல் குணசேகரன் வார்டு 30-ல் சுதாகரன் என வார்டு 24 முதல் 30 வரை திமுக வெற்றி பெற்று தனது வசமாக்கி உள்ளது.

வார்டு31-ல் பாமகவை சேர்ந்த மணிகண்டன் வெற்றி பெற்றுள்ளார். வார்டு 32 இல் பார்த்திபன் அதிமுகவை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். வார்டு 33-ல் திமுகவை சேர்ந்த சீனி ராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தமாக திமுக இருபத்தி மூன்று இடங்களையும் அதிமுக நான்கு இடங்களையும் சுயேட்சைகள் மூன்று இடங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு இடங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தையும் பெற்று உள்ளனர்.

அதிகப்படியாக இருபத்தி மூன்று இடங்களை திமுக கைப்பற்றி சேர்மன் பதவியை தனது வசமாகிவிட்டது.

You might also like